துணிவு திரைப்படத்தில் புதிதாக இணைந்த மற்றுமொரு பிரபல நடிகர்! யார் தெரியுமா?
துணிவு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் துணிவு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபல நட்சத்திரங்கள் பாவனி, அமீர், சிபி சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படமும் வெளியாகி அதனை உறுதிபடுத்தும் வகையில் இருந்தது.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் சிஜாய் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் துனிவு திரைப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் உள்ள தீவில் நடைபெற்று வருகிறது.
நடிகர் சிஜாய்-யும் அதே இடத்தில் போட்டோ எடுத்துகொண்ட புகைப்படத்தை தமிழ் திரைப்படத்தில் நடிப்பதாக அறிவித்திருக்கிறார்.
3 நாள் முடிவில் பொன்னியின் செல்வன் மொத்தமாக செய்த வசூல்