அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூலிக்கும்- கணிக்கப்பட்ட விவரம்
அஜித்தின் துணிவு
அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை படம் அஜித்தின் பைக் ரேஸிங்கை ரசிக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. தற்போது வினோத்-போனி கபூர்-அஜித் கூட்டணி துணிவு என்ற திரைப்படம் தயாராகியுள்ளது, படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி யூடியூபில் பல சாதனைகளை செய்தது.
தற்போது படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
துணிவு வசூல்
படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே வெளிநாடுகளில் நல்ல ப்ரீ புக்கிங் நடந்தது. தற்போது தமிழகத்திலும் 500 மேற்பட்ட திரையரங்குகளை படம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த விவரம், புக்கிங் போன்ற விவரங்களை வைத்து கணித்து பார்க்கும் போது படம் முதல் நாள் முடிவில் ரூ. 30 கோடி வரை வசூலிக்கும் என கூறுகின்றனர்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் வீடியோ

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
