சீக்கிரம் அதிக வெடியை வாங்குங்கள், துணிவு பட டிரைலர் அப்படி இருக்கு- பிரபலம் போட்ட பதிவு
அஜித்தின் துணிவு
நடிகர் அஜித் என்றாலே மாஸ் தான், சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் செம சூப்பரான முடிவு எடுத்து அதன்மூலம் மக்களையும் வியக்க வைத்துள்ளார். அவரைப் போல தைரியமாக நினைக்கும் நல்ல செயலை முடிக்க வேண்டும் என பலர் உருவாகியுள்ளனர்.
தற்போது அவரது நடிப்பில் துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே பாடல்கள் வெளியாகி செம வைரலானது.

டிரைலர் அப்டேட்
தற்போது ரசிகர்கள் மத்தியில் டிரைலர் குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இப்படம் மொத்தமாக 2 மணிநேரம் 23 நிமிடம் எனவும், சென்சார் வேலைகள் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதோடு படத்தின் டிரைலர் குறித்து ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இப்போது ஒன்றை பார்த்தேன், வெடிகளை அதிகம் வாங்கிக் கொள்ளுங்கள், நிறைய வாங்குங்கள் என டுவிட் செய்துள்ளார். ஆனால் இது உண்மையாகவே அவரது பக்கமா என தெரியவில்லை.
Just saw something. Buy extra crackers. Lots of extra crackers.
— NIRAV SHAH (@nirav_dop) December 29, 2022
40 வயதில் நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷுட் நடத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- அசந்துபோன ரசிகர்கள்