இதுவரை லாபத்தை கொடுக்காத வாரிசு.. தயாரிப்பாளரை திருப்திப்படுத்திய துணிவு
திருப்திப்படுத்திய துணிவு
கடந்த வாரம் போட்டிபோட்டு ஒரே நாளில் வெளிவந்த திரைப்படங்கள் வாரிசு மற்றும் துணிவு.
இதில் துணிவு திரைப்படம் தற்போது தயாரிப்பாளரை வசூல் ரீதியாக திருப்திபடுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், தயாரிப்பாளர் எதிர்பார்த்ததை விட துணிவு திரைப்படம் அதிக லாபத்தை கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால், துணிவு படத்துடன் அதே நாளில் வெளிவந்த வாரிசு படம் இன்னும் லாபத்தை தொடவில்லை என தெரியவந்துள்ளது.
லாபத்தை கொடுக்காத வாரிசு
ரூ. 210 கோடி வரை வசூல் செய்துவிட்டது என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல் வந்தாலும் கூட இன்னும் ரூ. 30 கோடி வசூல் செய்தால் மட்டுமே இப்படம் தயாரிப்பாளருக்கு லாபமாக அமையும் என்கின்றனர்.

அதே போல் வெளிநாட்டில் மட்டுமே சுமார் ரூ. 15 கோடி வசூல் செய்தால் வாரிசு லாபத்தை கொடுக்குமாம். பொறுத்திருந்து பார்ப்போம் வாரிசு லாபத்தை அள்ளித்தந்த படமாக அமையுமா என்று.
10 நாட்களில் 100 கோடியை தொட்ட துணிவு.. வாரிசு படத்தின் நிலைமை என்ன