துணிவு படத்திலிருந்து லீக்கான முக்கிய காட்சி.. கடுப்பான அஜித் ரசிகர்கள்
துணிவு
எச். வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ராஜ் இசையமைத்துள்ளார்.

அஜித்துடன் இவர் இணைவது இதுவே முதல் முறையாகும். நாளை வெளியாகவிருக்கும் இப்படத்தை முதல் நாள் முதல் காட்சி காண வெறித்தனமாக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
லீக்கான முக்கிய காட்சி
இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக துணிவு படத்தில் இருந்து டைட்டில் கார்டு காட்சி லீக்காகியுள்ளது.
ரசிகர்கள் முக்கியமாக எதிர்பார்க்கும் விஷயங்களில் ஒன்று அஜித்தின் பெயரை திரையில் பார்ப்பது தான். அந்த காட்சி தற்போது லீக்கானதை பார்த்த ரசிகர்கள் செம கடுப்பாகியுள்ளனர்.

பல கோடியில் செலவு செய்து பல நபர்களின் கடிஉழைப்பில் உருவாகும் படத்தை கண்ணுக்கு தெரியாத சிலர் இணையத்தில் லீக் செய்து விடுகிறார்கள். சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வரும் அந்த லீக் வீடியோவை யாரும் இனி பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பூவா, தலயா போட்டு திரையரங்கை பிடித்த அஜித் ரசிகர்கள்.. சோகத்தில் மற்றொரு தரப்பு, வெளிவந்த வீடியோ