பெரும் தொகைக்கு அஜித்தின் துணிவு படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி.. வெளிவந்த தகவல்
துணிவு
எச். வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் துணிவு. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார் நடித்து வருகிறார்.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் First லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சாட்டிலைட் உரிமை
பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாகியுள்ள இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான கலைஞர் டிவி பெரும் தொகையை கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இன்னும் படப்பிடிப்பே முடியாத நிலையில் அதற்குள் துணிவு படத்தின் உரிமைகள் விற்றுப்போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan