துப்பாக்கி வெளியாகி 10 வருடங்கள் ஆகிவிட்டதா! மொத்தமாக அப்படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
துப்பாக்கி
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி.
விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமான துப்பாக்கி, அவரின் தொடர் தோல்விகளுக்கு பிறகு இப்படம் தான் வரலாறு காணாத வெற்றியை பெற்றது.

மேலும் துப்பாக்கி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 வருடங்கள் ஆகியுள்ளது, அதனை தற்போது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஹாஷ்டேக் உடன் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் துப்பாக்கி திரைப்படம் தான் ரஜினி, கமல், ஷங்கர் திரைப்படத்தை தவிற முதன்முதலில் 100 கோடி வசூல் படைத்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது .
இறுதியாக துப்பாக்கி திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 120 கோடி வரையில் வசூல் செய்திருக்கும் என ஒரு தகவல் உள்ளது.

பல லட்சத்துடன் இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விஜே. மஹேஸ்வரி