டிக்கெட் புக்கிங்-ல் பீஸ்ட், KGF படங்களுக்கு இடையே கடும் போட்டி !
டிக்கெட்ஸ் சேல்ஸ்
இம்மாதம் இந்தியளவில் எதிர்பார்க்கப்படும் இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
அதன்படி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதியும், KGF 2 திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே KGF படத்தின் ட்ரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நிலையில், நேற்று பீஸ்ட் படத்தின் ட்ரைலரும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே தற்போது UK-வில் இந்த இரண்டு படங்களின் டிக்கெட் சேல்ஸ் தொடங்கியுள்ளதாம்.
அதன்படி KGF திரைப்படத்திற்கு தற்போது வரை 5000 டிக்கெட்ஸ் சேல்ஸ் ஆகியுள்ளதாம், போட்டியாக விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் 3500 டிக்கெட்ஸ் விற்றுள்ளதாம்.

ட்ரைலர் வெளியாகியும் KGF படத்திற்கு அடுத்து தான் பீஸ்ட் ! ரசிகர்களிடையே பரவி வரும் பட்டியல்..