புதிய சீரியல் வருகையால் ஜீ தமிழில் வீரா சீரியலின் நேரம் மாற்றம்... புதிய நேரம்
வீரா சீரியல்
ஜீ தமிழில் வைஷ்ணவி-அருண் முதன்முறையாக ஜோடியாக நடிக்க கடந்த 2024ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் வீரா.
சிவ சேகர் இயக்கும் இந்த தொடரில் மாறன்-வீரா ஜோடிக்கு ரசிகர்களிடம் பெரிய கிரேஸ் உள்ளது. அவர்கள் இடம்பெறும் காட்சிகள் வந்தாலே போதும் நிறைய வீடியோக்கள் காதல் பாடல்களை வைத்து உருவாகிவிடும்.
வீரா சீரியல் நடிகர்களுக்கு ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் சில விருதுகளும் கிடைத்தது.

மாற்றம்
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வீரா சீரியலின் நேரம் மாற்றம் குறித்த தகவல் வந்துள்ளது. வரும் நவம்பர் 3 முதல் திருமாங்கல்யம் என்ற புதிய சீரியல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
இதனால் வீரா சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் சில சீரியல்களின் நேரம் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.