ஜீ தமிழில் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்... எந்த தொடர் தெரியுமா?
ஜீ தமிழ்
சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் சன் டிவி, அதேபோல் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது என்றால் விஜய்.
இரண்டு தொலைக்காட்சிகளையும் தாண்டி டிஆர்பியில் போட்டி போட கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது ஜீ தமிழ்.
இந்த தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம், அண்ணா, மாரி, நினைத்தாலே இனிக்கும் என நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகிறது.
கட்சி அறிவிப்பு செய்யும் போது ஒரேஒரு விஷயத்திற்காக வருத்தப்பட்ட விஜய்.. கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்
சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
நேரம் மாற்றம்
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரின் நேரம் மாற்றம் குறித்த தகவல் தான் வெளியாகியுள்ளது.
அதாவது ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் மாரி தொடர் வரும் திங்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.