லியோ வெளிநாட்டில் டிக்கெட் புக்கிங்கில் இவ்ளோ பெரிய மோசடியா- அம்பலமாக்கிய பிரபலம்
லியோ படம்
பெரிய நடிகர்களின் படங்களுக்கு எப்போதுமே மக்கள் பெரிய வரவேற்பு கொடுப்பார்கள், அதிக அளவிலும் கொண்டாடுவார்கள். அப்படி விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியாகி அதிரடி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
முதல் நாள் முடிவிலேயே ரூ. 148 கோடி வசூலித்த இப்படம் முதல் வார முடிவில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.
வரும் வார நாட்களில் பட வசூல் குறைந்திருந்தாலும் வார இறுதியில் வசூல் உயரும் என கூறப்படுகிறது, பொறுத்திருந்து பார்ப்போம்.

ஷாக்கிங் தகவல்
திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் விஜய்யின் லியோ படத்தின் வசூல் குறித்து ஷாக்கிங் தகவல் கூறியுள்ளார்.
அதில் அவர், லியோ பட தயாரிப்பாளரே எனக்கு போன் செய்து லியோ பாக்ஸ் ஆபிஸ் குறித்து பேசியதற்கு என்ன இப்படியெல்லாம் பேட்டி கொடுக்கிறீர்கள் என கேட்டார்.
லியோ படத்தின் நிஜ வசூல் குறித்து சரியாக இல்லை, லலித் குமாரே தனக்கு தோன்றிய வசூலை கூறி வருகிறார்.
ஓவர்சீஸில் லலித்குமார் நிறைய Malpractice செய்கிறார். உதாரணத்துக்கு வெளிநாடுகளில் ரூ. 5 கோடி இவர்களே கொடுத்து டிக்கெட் வாங்கி அதை ரசிகர்கள் வாங்கி பார்த்தார்கள் என கணக்கு காட்டுகிறார்.
விஜய்யிடம் நல்ல பெயர் வாங்க, அவரின் அடுத்த படத்தை தயாரிக்க என இவரே நிறைய விஷயங்களை செய்கிறார் என திருப்பூர் சுப்ரமணியம் ஷாக்கிங் தகவல் கூறியுள்ளார்.