முக்கிய ஹாலிவுட் நடிகருடன் கமலை ஒப்பிட்டு வரும் ரசிகர்கள்! ஒரே வருடத்தில் அவர்கள் செய்த விஷயம்..
ஒரே வருடத்தில் வெளியான படங்கள்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறி கொண்டே போகிறது.
மேலும் சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான ட்ரைலர் மாபெரும் வரவேற்பை பெற்று பார்வைகளை குவித்து வருகிறது.
விஜய் சேதுபதி, பகத் பாசில் மட்டுமின்றி இப்படத்தில் நடிகர் சூர்யாவும் நடித்துள்ளார். நேற்று கூட சூர்யா விக்ரம் படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை லோகேஷ் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது கமல் மற்றும் ஹாலிவுட் டாப் நடிகர் டாம் குருஸை ஒப்பிட்டு தான் தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
ஆம், அப்படி அது என்னவென்றால் 1986-ல் இவர்கள் இருவரின் திரைப்படங்கலான டாப் கன் மற்றும் விக்ரம் வெளியாகி இருந்தது.
ஆனால் தற்போது இத்தனை வருடங்கள் கழித்து அதே கதாபாத்திரம் மற்றும் படத்தில் இருவரும் நடித்துள்ளனர். இந்த சுவாரஸ்யமான தகவல் தான் ரசிகர்களிடம் பரவி வருகிறது.

நடிகை யாஷிகாவிற்கு என்ன ஆனது, ஏன் இப்படி தேம்பி தேம்பி அழுகிறார்- வைரலான ஷாக்கிங் வீடியோ