அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. லிஸ்ட் இதோ
சம்பளம்
ரஜினிகாந்த், விஜய், அஜித், அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோர் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், நடிகைகளில் யார்யார் அந்த லிஸ்டில் இருக்கிறார்கள் என பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
[0F7XR ]
இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
டாப் 5 நடிகைகள்
நயன்தாரா - மெகாஸ்டார் 157, டாக்சிக், மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
ராஷ்மிகா - புஷ்பா 2, சாவா, அனிமல் என மிகப்பெரிய பான் இந்தியன் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த ராஷ்மிகா ரூ. 13 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
சாய் பல்லவி - தென்னிந்திய சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ள சாய் பல்லவி, தற்போது ராமாயணா படத்தின் மூலம் பாலிவுட் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 12 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
த்ரிஷா - தென்னிந்திய சினிமாவில் பிசியாக நடித்து வரும் த்ரிஷா, ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம்.
சமந்தா - கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் சமந்தா வெப் தொடரில் நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். மேலும் படங்களில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

திருவாரூர் அருகே டீசல் கொண்டு சென்ற சரக்கு ரயிலில் பெரும் தீ விபத்து - ரயில்சேவைகள் பாதிப்பு IBC Tamilnadu
