ஜெயிலர் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. அட இவரா, தரமான சம்பவம்
ரஜினிகாந்த்
நெல்ஸன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர்.
மாஸ் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
படம் உலகளவில் மாபெரும் வசூலை குவித்து, தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியது. ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 - ம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படம் குறித்து அறிவிப்பு வெளியான உடன் யார்யாரெல்லாம் இப்படத்தில் நடிக்கப்போகிறார்கள் என்பது குறித்த பேச்சும் இணையத்தில் எழுந்துவிட்டது.
அட இவரா
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பாலையா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
