இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என மக்களுக்கு முதன்முதலில் அறிவித்த நடிகர்- யார் அவர், எப்படி நடந்தது?
பூர்ணம் விஸ்வநாதன்
சினிமா மீது உள்ள ஆசையால் மற்ற ஊர்களில் இருந்து சென்னை வந்து சாதித்து பல கலைஞர்கள் உள்ளார்கள்.
சிலருக்கு வெற்றி உடனே கிடைத்துவிடும், ஆனால் பலர் நிறைய கஷ்டங்களை தாண்டி தான் சினிமாவில் மக்களிடம் அங்கீகாரம் பெறுவார்கள்.
அப்படி நாடகங்களின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர் தான் பூர்ணம் விஸ்வநாதன்.
திருநெல்வேலியை சேர்ந்த இவரது அண்ணன் பூர்ணம் ராமச்சந்திரன் சென்னை அகில இந்திய வானொலியில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.
அண்ணனின் உதவியால் தனது 24 வயதில் டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலியில் செய்திவாசிப்பாளராக பணியாற்ற துவங்கியுள்ளார் பூர்ணம் விஸ்வநாதன்.

மகிழ்ச்சி செய்தி
வானொலியில் பணியாற்றிய இவருக்கு யாருக்கும் கிடைக்காத ஒரு வரமாக ஒரு விஷயம் நடந்தது.
அது என்னவென்றால், இந்தியா சுதந்திரம் அடைந்த போது அந்த மகிழ்ச்சியான செய்தியை ஆனந்த கண்ணீரோடு ஆல் இந்தியா ரேடியோ வானொலியின் மூலம் முதன் முதலில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தவர் பூர்ணம் விஸ்வநாதன் தான்.
இதுவரை அவ்வளவாக யாருக்கும் தெரியாத இந்த தகவல் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.
உயர்ந்த மனிதன், விளையாட்டுப் பிள்ளை, மௌன ராகம், வருஷம் 16, தில்லு முள்ளு, மகாநதி, ஆசை என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் கடைசியாக நடித்தார்.
கடந்த 2008ம் ஆண்டு பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள் காலமானார்.
