அடுத்தடுத்து டாப் நடிகர்களின் திரைப்படங்கள் ! சியான் 61 திரைப்படத்திலும் நடிக்கும் நடிகை..
சியான் 61 கதாநாயகி
சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து பெரியளவில் உருவாகும் திரைப்படம் சியான் 61, சமீபத்தில் தான் இப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது.
மேலும் இப்படம் கே.ஜி.எப் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம் என்றும், பெரியளவில் இப்படம் 3டி-ல் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே தற்போது இப்படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளன. ஆம், இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா, அப்படத்தை தொடர்ந்து விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்யின் பெயர் மற்றும் கதாபாத்திரம் ! முதல்முறையாக வெளியான அப்டேட்