வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்யின் பெயர் மற்றும் கதாபாத்திரம் ! முதல்முறையாக வெளியான அப்டேட்
விஜய்யின் கதாபாத்திரம்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் ஏகபட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அத்துடன் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது முதல்முறையாக அப்படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், அதன்படி இப்படத்தில் “விஜய் ராஜேந்திரன்” என்ற பெயரில் அப்ளிகேஷன் டிசைனராக நடிக்கிறார் தளபதி விஜய்.
ரஜினி எடுக்கவிருந்த தவறான முடிவு ! கமல் சொன்ன அறிவுரையால் மெகா ஹிட்டான திரைப்படம்..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
