அஜித்தை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் முன்னணி நடிகை.. தலைவர் 170 படத்தின் நடிகர், நடிகை பட்டியல்
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற 10ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு பின் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படம் தான் தலைவர் 170. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை TJ ஞானவேல் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
நடிகர், நடிகை பட்டியல்
ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார். அதே போல் பகத் பாசில் மற்றும் தெலுங்கு நடிகர் நானி முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்கள் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளாராம். அஜித்தின் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து மஞ்சு வாரியர் நடிக்கவிருக்கும் தமிழ் படம் தலைவர் 170 என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதயத்தில் 2 ஓட்டை, 3 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை- நடிகையின் குழந்தைக்கு நடந்த சோகம்