சிம்ரன், நயன்தாரா என ரஜினியின் ஜெயிலர் பட காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்ட நாயகிகள்- வைரல் வீடியோ
ஜெயிலர் படம்
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இடைவேளைக்கு பிறகு நடித்துவரும் திரைப்படம் ஜெயிலர்.
விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கியதை தொடர்ந்து இப்போது ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கி வருகிறார் நெல்சன்.
படத்திற்கான படப்பிடிப்பு இடைவேளை விடப்பட்டு நடந்து வந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தின் ஒரு பாடல் அண்மையில் வெளியானது.
அந்த பாடலில் நடிகை தமன்னா வித்தியாசமான லுக்கில் நடனம் ஆட வீடியோ மற்றும் அவரின் நடனம் ரசிகர்களிடம் வைரலானது.
லேட்டஸ்ட் வீடியோ
நடிகை தமன்னாவும் அவர் நடனம் ஆடிய வீடியோ பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் பிரபல நடிகைகளில் முகத்தை எடிட் செய்து ரசிகர் ஒருவர் வீடியோ வெளியிட அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல் நாளிலேயே அடிதூள் வசூல் வேட்டை நடத்தியுள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன்- முழு விவரம்