விஜய்யே ஆசைப்பட்டு கேட்டும் அவரை இயக்க மறுத்துள்ள பிரபல இயக்குனர்- இதுவரை வெளிவராத தகவல்
நடிகர் விஜய்
இந்திய சினிமா முன்னணி நடிகர்கள் என்று ஒரு கணக்கெடுப்பு எடுத்தால் அதில் டாப் 5ல் வந்துவிடுவார் நடிகர் விஜய். அந்த அளவிற்கு பெரிய அளவில் ஹிட் படங்கள் கொடுத்து சிறந்து விளங்கி வருகிறார்.
இவரது நடிப்பில் பீஸ்ட், வாரிசு மற்றும் லியோ என கடைசியாக வெளியான 3 படங்கள். இதில் அண்மையில் வெளியான லியோ திரைப்படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி ஹிட் படமாக அமைந்தது.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாக படத்தில் விஜய் நடிக்க, அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படம் டைம் டிராவலை மையமாக வைத்து கமர்ஷியலாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யின் ஆசை
நடிகர் விஜய்க்கு சினிமா பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததாம், அவர் வேறுயாரும் இல்லை பாரதிராஜா தானாம்.
இதனை அவர் தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கூற இருவரும் பாரதிராஜாவை சந்தித்து இந்த விஷயத்தை கூறியுள்ளார்கள். ஆனால் பாரதிராஜா, விஜய்யை இயக்க மறுக்க இதனால் தளபதி ரொம்பவே வருத்தப்பட்டாராம்.
சில வருடங்கள் கழித்து பாரதிராஜா உன்னை இயக்கியிருக்க வேண்டும் மிஸ் ஆனது என கூற அதற்கு விஜய் ஆமாம் சார், எனக்கு அந்த நாள் நல்லாவே நியாபகம் இருக்கு என சொன்னாராம்.
பல வருடங்கள் கழித்து இந்த தகவலை பாரதிராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
