2023ல் முதல் நாள் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. முதலிடத்தில் எந்த படம் தெரியுமா
தமிழ் சினிமா 2023
இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஆண்டு என்று கூட சொல்லலாம். ஏனென்றால் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளிவந்த திரைப்படங்களும் சரி, குறைவான பட்ஜெட்டில் வெளிவந்த திரைப்படங்களும் சரி மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
உதாரணத்திற்கு லியோ, ஜெயிலர், துணிவு, போர் தொழில், அயோத்தி, சித்தா என பல திரைப்படங்களை கூறலாம்.
இதன்மூலம் தமிழ் சினிமா 2023ல் இருந்து 2024ல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்நிலையில், 2023ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது உலகளவில் முதல் நாள் மட்டுமே அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
டாப் 10 லிஸ்ட்
லியோ- ரூ. 148+ கோடி
ஜெயிலர் - ரூ. 95+ கோடி
பொன்னியின் செல்வன் 2 - ரூ. 60+ கோடி
வாரிசு - ரூ. 47+ கோடி
துணிவு - ரூ. 42+ கோடி
மாவீரன் - ரூ. 15+ கோடி
மாமன்னன் - ரூ. 14+ கோடி
மார்க் ஆண்டனி - ரூ. 12+ கோடி
வாத்தி - ரூ. 12+ கோடி
பத்து தல - ரூ. 10+ கோடி

நேட்டோ வான் பரப்புக்குள் நுழைந்த டிரோன்கள்: விளக்கம் கேட்டு ரஷ்ய தூதருக்கு ஜேர்மனி அழைப்பு News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
