சேயோன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் உச்ச நட்சத்திரம்.. யார் தெரியுமா?
சேயோன்
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் தாய் கிழவி. இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார்.

முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்திய சிவகுமார், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து சேயோன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிக்கிறார். அண்மையில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது.
கமல் ஹாசன்
இந்த நிலையில், சேயோன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து உச்ச நட்சத்திரம் ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை, நடிகர் கமல் ஹாசன்தான். ஆம், சேயோன் திரைப்படத்தில் கமல் ஹாசன் விருமாண்டி கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இதுமட்டும் உறுதியானால் கண்டிப்பாக சேயோன் படத்தின் பிசினஸ் மிகப்பெரிய அளவில் உயரும் என்கின்றனர். மேலும் இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மாபெரும் ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan