ரஜினி - கமல் படத்தில் இணையும் மற்றொரு சூப்பர்ஸ்டார் நடிகர்.. அட இவரா, வேற லெவல் காம்போ
KH x RK
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் பல ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு தற்போது KH x RK தலைப்பு உள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் புரோமோ வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு இன்னும் பல மாதங்களுக்கு பின்தான் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேற லெவல் காம்போ
இந்த நிலையில், KH x RK திரைப்படத்தில் மற்றொரு சூப்பர்ஸ்டார் நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை, மலையாள நடிகர் மம்மூட்டி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறுகின்றனர்.

கமல் - ரஜினி - மம்மூட்டி ஆகிய மூவரையும் ஒரே படத்தில் பார்ப்பது என்பது ரசிகர்களுக்கு கண்டிப்பாக மிகப்பெரிய விருந்தாக அமையும். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri