இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் என்று தெரிகிறதா? இந்திய சினிமாவின் வசூல் நாயகி
வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் இந்திய சினிமாவில் வசூல் நாயகியாக வலம் வந்த ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

கதாநாயகியாக மட்டுமின்றி சோலோ ஹீரோயினாகவும் நடித்து பல சூப்பர்ஹிட் படங்களை இவர் கொடுத்துள்ளார். மேலும், தற்போது இவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இருக்கும் வரவேற்பு கொஞ்சம் கூட குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அனுஷ்கா
அவர் வேறு யாருமில்லை, நடிகை அனுஷ்கா ஷெட்டிதான். அருந்ததி, பாகுபலி, பாகுபலி 2, சிங்கம், மிர்ச்சி, என்னை அறிந்தால் என பல சூப்பர்ஹிட் படங்களை இவர் கொடுத்துள்ளார். இவர் தனது சகோதரர்களுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் அடுத்ததாக கத்தனார் - தி வைல்ட் சோர்சரர் என்கிற திரைப்படம் மலையாளத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.