OTT-ல் அதிக வியூஸ்களை தட்டிதூக்கிய டாப் படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ
ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை எப்படி திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தற்போது படங்களை தியேட்டர்களில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் OTT பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது.
என்னென்ன?
இந்நிலையில், ஜூலை 14ந் தேதி முதல் 20ந் தேதி வரை OTT-ல் அதிகம் பார்க்கப்பட்ட டாப் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கே காணலாம்.
இதில், ஆப் ஜெய்சோ கொய் என்ற இந்திப் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் 37 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக தனுஷின் குபேரா திரைப்படம் அமேசான் பிரைம் OTT தளத்தில் 25 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
நெட்பிளிக்ஸ் OTT-ல் ஸ்ட்ரீம் ஆகி வரும் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் 20 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. அதை தொடர்ந்து, அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகி வரும் ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் என்ற ஆங்கில திரைப்படம் 15 லட்சம் வியூஸ் கடந்துள்ளது.