ஜீ தமிழில் முடிவுக்கு வரும் சூப்பர் ஹிட் 3 தொடர்கள்- வருத்தத்தில் ரசிகர்கள்
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரை பொறுத்த வரையில் இப்போது 3 தொலைக்காட்சிகள் தான் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. சன், விஜய் அடுத்து ஜீ தமிழ், கடந்த சில மாதங்களாகவே இந்த தொலைக்காட்சியில் நிறைய ஹிட் சீரியல்கள் முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளன.
இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்தாலும் புதிய தொடர்கள் வருவதால் ஆறுதல் அடைகின்றனர்.
தற்போது ஒரு தொலைக்காட்சியில் தொடர்ந்து 3 தொடர்கள் முடிவுக்கு வரும் செய்தி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
3 தொடர்கள்
ஜீ தமிழில் எந்தெந்த தொடர்கள் என்றால் புதுப்புது அர்த்தங்கள், சித்திரம் பேசுதடி மற்றும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி என இந்த 3 தொடர்கள் தான் முடிவுக்கு வருகிறதாம். அதில் முக்கியமாக புதுப்புது அர்த்தங்கள் தொடர் ரசிகர்கள் தான் இதற்குள் ஏன் முடிக்கிறீர்கள் என கவலைப்பட்டு வருகிறார்கள்.
நடிகர் சியான் விக்ரமின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்