10 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
டூரிஸ்ட் ஃபேமிலி
2025ம் ஆண்டு தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் இணைந்து நடித்த இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.
சென்சிட்டிவான கதைக்களத்தில் உருவான இப்படத்தில் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ரமேஷ் திலக் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் 10 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உலகளவில் ரூ. 36 கோடி வசூல் செய்துள்ளது.