யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்...
ட்ரெண்டிங் நடிகை கிரிஜா
நாம் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகும். அப்படி சமீபத்தில் Interview மூலம் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை கிரிஜா. அந்த நேர்காணலில் கலந்துகொண்டு பேசிய நடிகை கிரிஜாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் படு வைரலாகி வரும் இந்த நடிகை கிரிஜா யார் என உங்களுக்கு தெரியுமா?
யார் இந்த கிரிஜா
மராத்தி மொழியில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த மனிணி எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் நடிகை கிரிஜா. தொடர்ந்து மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், அவ்வப்போது இந்தியிலும் தலைகாட்டி வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த Inspector Zende படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் இவர் கலக்கியுள்ளார். இந்திய அளவில் புகழ் பெற்ற CID சீரியலில் நடித்துள்ளார். மேலும், லேடீஸ் ஸ்பெஷல், கார்டெல், மாடர்ன் லவ்: மும்பை, 13th: Some Lessons Aren't Taught in Classrooms ஆகியவற்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை கிரிஜா கடந்த 2011ஆம் ஆண்டு சுஹ்ருத் கோட்போலே என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகன் இருக்கிறார்.

நெருக்கமான காட்சி
'தெரபி ஷெரபி' என்கிற வெப் தொடரில் நடிகர் குல்ஷன் உடன் ஒரு நெருக்கமான காட்சியில் நடித்த அனுபவத்தை பற்றி நடிகை கிரிஜா மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், "காட்சிக்கு முன் நீங்கள் எவ்வளவு திட்டமிடலும், ஒரு மில்லிகிராம் அளவு கூட அசவுகரியத்தை உணர வைக்காதவர்கள் மிக குறைவுதான். குல்ஷன் அவர்களில் ஒருவர். படப்பிடிப்பின் பொது 16 அல்லது 17 முறையாவது, நீங்கள் ஓகே வா.. ஓகே வா என்று கேட்டிருப்பார். அந்த அக்கறை மற்றும் மரியாதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது" என கூறினார்.

கன்னட சினிமா நடிகர் குல்ஷன் தேவையா சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற காந்தாரா சாப்டர் 1 படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.