சமந்தா இடத்தை பிடித்த இளம் நடிகை.. புஷ்பா 2 படத்தில் காத்திருக்கும் செம குத்து பாடல்
புஷ்பா
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் முன்னணி நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி படத்திற்கு மிகப்பெரிய ரீச் கொண்டு வந்தார். படத்தின் வெற்றிக்கு சமந்தாவின் நடனமும் முக்கிய காரணமாக அமைந்தது.

சமந்தா இடத்தில் இவரா
ஆனால், இரண்டாம் பாகத்தில் சமந்தா நடனமாடவில்லை. அவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடனமாடுவார் என கூறப்பட்டது. பாலிவுட் உள்ளிட்ட பல திரையுலகில் உள்ள நடிகைகளின் பெயர் இதில் அடிபட்ட நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

அனிமல் படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகை ட்ரிப்டி டிம்ரி. சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ள இவர் தான் தற்போது புஷ்பா 2 படத்தில் சமந்தாவிற்கு பதிலாக ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடமாடவுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த பாடலின் படப்பிடிப்பு இனிமேல் தான் நடக்கவுள்ளது என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் சமந்தாவின் நடனத்தை மிஞ்சுகிறாரா ட்ரிப்டி டிம்ரி.
சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! IBC Tamilnadu
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri