அரசியல் கட்சியில் நடிகை திரிஷா.. சர்ச்சைக்கு நடிகையின் பதில்
திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் அடுத்ததாக ராங்கி எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். இதற்காக செய்தியாளர்கள் சந்திப்பில் கூட சமீபத்தில் கலந்துகொண்டார்.
இதில், பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான முறையில் பதிலளித்த வந்த நடிகை திரிஷாவிடம் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டது.
அரசியல் எண்ட்ரி
அதாவது சில நாட்களுக்கு முன், நடிகை திரிஷா தேசிய கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட போவதாக கூறப்பட்டது.
இது குறித்து தான் இந்த சந்திப்பில் திரிஷாவிடம் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்க்கு பதிலளித்த திரிஷா, நான் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார். இதன்முலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. தற்போதைய நிலை இதுதான்