தனுஷுடன் சில நாட்கள் நடித்துவிட்டு படத்திலிருந்து வெளியேறிய திரிஷா.. அது என்ன படம் தெரியுமா
தனுஷ் - திரிஷா
தனுஷ் மற்றும் திரிஷா இருவரும் நல்ல நண்பர்கள் என்பதை சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிவார்கள். இவர்கள் இருவரும் இணைந்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவான கொடி திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இதை தவிர வேறு எந்த திரைப்படங்களிலும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால், தனுஷின் சூப்பர்ஹிட் திரைப்படம் ஒன்றில் நடிகை திரிஷா சில நாட்கள் நடித்துவிட்டு அதன்பின் படத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

நீயெல்லாம் நாயகியா நடிக்க மாட்ட, நீயெல்லாம் Artistஆ.. அய்யனார் துணை நடிகை மதுமிதாவை விமர்சித்த இயக்குனர், யார் அது?
ஆடுகளம்
அதுதான், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருப்பார். இது நடிகை டாப்ஸியின் முதல் தமிழ் திரைப்படமாகும். ஆனால், அவருக்கு முன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் திரிஷா.
கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்திலிருந்து அவர் வெளியேறியதாக சொல்லப்படுகிறது. திரிஷா, தனுஷ் இணைந்து நடித்த காட்சிகளின் சில புகைப்படங்கள் கூட வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..
