68 வயது நடிகருடன் இணைந்த திரிஷா.. விஜய், அஜித்தை தொடர்ந்து இவருடன் ஜோடிபோட்ட நடிகை
நடிகை திரிஷா
திரிஷா தற்போது தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக மாறிவிட்டார். பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் குவித்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படத்தில் கதாநாயகியாக நடித்த திரிஷா, தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் பாலிவுட் திரையுலகில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் படத்திலும் திரிஷா கதாநாயகியாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

68 வயது நடிகருடன் இணைந்த திரிஷா
இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டாராக கொண்டாடப்பட்டு வரும் சிரஞ்சீவியின் புதிய படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார் திரிஷா. 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இவர்கள் இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. படப்பிடிப்பில் இணைந்த திரிஷாவை, சிரஞ்சீவி வரவேற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க..
#Vishwambhara welcomes #TrishaKrishnan on-board! She joined the sets.#PadmaVibhushanChiranjeevi pic.twitter.com/mKAYLWWncq
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) February 5, 2024
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri