4வது முறையாக பிரபல நடிகருடன் இணையும் நடிகை த்ரிஷா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
த்ரிஷா
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் மே 14ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து ராம், விஸ்வம்பரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதன்பின் த்ரிஷா எந்த ஒரு திரைப்படத்தையும் கமிட் செய்யாத காரணத்தினால் அவர் சினிமாவிலிருந்து விலகப்போவதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் த்ரிஷா பதிவு ஒன்றை வெளியிட்டார். இதன்பின் அந்த பேச்சு அப்படியே அமைதியானது.

புதிய திரைப்படம்
இந்த நிலையில், த்ரிஷா அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைந்து த்ரிஷா நடிக்கவிருக்கிறாராம்.

இவர்கள் இருவரும் முதல் முறையாக ஆயுத எழுத்து திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதன்பின், தெலுங்கில் வெளிவந்த நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டானா படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்தனர். இதை தொடர்ந்து அரண்மனை 2 படத்தில் இருவரும் நடித்திருந்த நிலையில், தற்போது 4வது முறையாக இணையப்போவதாக கூறப்படுகிறது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளாராம். இப்படத்திற்கான முதற்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர் IBC Tamilnadu