நேற்று குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய சந்தோஷிற்கு ஜோடியான நடிகை திரிஷா..
திரிஷாவுடன் நடிக்கும் CWC பிரபலம்
கடந்த 19 வருடங்களாக தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை திரிஷா.
இவர் தற்போது கதாநாயகியாக மட்டுமல்லாமல், சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.
நடிகை திரிஷா தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்து வருவதற்கு 96 படம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனென்றால், பல தோல்வி படங்களை கொடுத்து வந்த திரிஷாவிற்கு மாபெரும் வெற்றியை, 96 படம் தேடி தந்தது.
இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் நடிகை திரிஷாவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தற்போது திரிஷாவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் சந்தோஷ் நடிக்கவுள்ளார், அத்துடன் டான்சிங் ரோஸ் ஷபீரும் நடிக்க இருக்கிறார்.
அப்படக்குழுவினர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

உடல் எடையை குறைத்து செம லுக்கில் நடிகை சோனியா அகர்வால்- வைரலாகும் புகைப்படம்