தக் லைஃப் படத்தில் த்ரிஷா காதாபாத்திரம் இதுதான்.. இயக்குநர் சொன்ன ரகசியம்
த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 42 வயதை எட்டிய த்ரிஷா, இன்றும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
மேலும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் இவரும் ஒருவர். அடுத்து த்ரிஷா நடிப்பில் திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த இந்தப் படம் வரும் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று திரிஷா நடனத்தில் 'சுகர் பேபி' என்ற 2-வது பாடல் வெளியானது.
இதுதான்
இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம், இப்படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், " தக் லைப்" படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் பொன்னியின் செல்வனுக்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும். நான் அவரிடம் இந்த படத்தில் உங்களில் கதாபாத்திரம் குந்தவைக்கு நேர்மாறாக இருக்கும் என்று சொன்னேன், த்ரிஷாவும் அதற்கு ஒப்புக்கொண்டார்" என்று தெரிவித்துள்ளார்.

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
