விடாமுயற்சி படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
த்ரிஷா
முன்னணி நடிகை த்ரிஷா தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் ஒருவர். பொன்னியின் செல்வன் லியோ படங்களுக்கு பின் த்ரிஷாவின் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
இவர் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் வெளிவரவுள்ளது. மேலும் இவர் கைவசம் குட் பேட் அக்லி, விஸ்வம்பரா, ராம், சூர்யா 45 என பல திரைப்படங்கள் உள்ளன.
இதில் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணைந்து இப்படத்தில்தான் த்ரிஷா நடித்துள்ளார்.
த்ரிஷா வாங்கிய சம்பளம்
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படித்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ரூ. 6 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் த்ரிஷா.
ஆனால், தற்போது இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

மனிதர்களைக் கொல்ல ஆசை! பூனைகளை சித்திரவதை செய்த லண்டன் சிறுவன்: அதிர்ச்சி வாக்குமூலம்! News Lankasri

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
