சினிமாவில் நடிப்பதற்கு முன் சூப்பர்ஸ்டார் உடன் நட்பில் இருந்த த்ரிஷா.. பலருக்கும் தெரியாத ரகசியம்
த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. இவர் விஜய், அஜித், சூர்யா, மகேஷ் பாபு, கமல், சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
42 வயதை எட்டிய த்ரிஷா, இன்றும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். மேலும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் நடிப்பில் சூர்யா 45 திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு குறித்து பல ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் த்ரிஷா கூறிய விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
த்ரிஷா பேச்சு
இதில், "மகேஷ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். அத்தகைய பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவர் மிகவும் மரியாதை கொடுப்பார். பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், மகேஷை எனக்கு நீண்ட காலமாக தெரியும்.
மகேஷ் பாபு தனது கல்லூரி நாட்களில் சென்னையில் இருந்தார். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் இருந்தனர். அவர்கள் மூலம் தான் மகேஷுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அப்போது நாங்கள் நடிகர்களாக வருவோம் என்று தெரியாது. அது வெறும் ஹாய் பாய் நட்பு மட்டுமே" என கூறியுள்ளார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
