கடற்கரையில் நடிகை திரிஷா எடுத்த வீடியோ, அதனை பதிவிட்டு அவர் சொன்ன விஷயம் !
தமிழ் சினிமாவின் எவெர்க்ரீன் நடிகை
கடந்த 19 வருடங்களாக தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை திரிஷா.
இவர் தற்போது கதாநாயகியாக மட்டுமல்லாமல், சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.
இவருடைய கைவசம் தற்போது பொன்னியின் செல்வன், கர்ஜனை, ராம், ராங்கி உள்ளிட்ட படங்கள் உள்ளன.
நடிகை திரிஷா தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்து வருவதற்கு 96 படம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனென்றால், பல தோல்வி படங்களை கொடுத்து வந்த திரிஷாவிற்கு மாபெரும் வெற்றியை, 96 படம் தேடி தந்தது.

Señorita திரிஷா
இந்நிலையில் படங்களில் பிஸியாக நடித்து வந்த திரிஷா தற்போது அவரின் விடுமுறை தினங்களை வெளிநாடுகளில் கழித்து வருகிறது.
அதன்படி மெக்ஸிகோவில் உள்ள நடிகை திரிஷா அங்கு கடற்கரையில் பயணம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் "அவர்கள் என்னை Señorita என்று தான் அழைப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
They call me Señorita?#Mexico pic.twitter.com/eMgruFi0uB
— Trish (@trishtrashers) March 16, 2022
கையில் குழந்தையுடன் நடிகை சமந்தா ! ரசிகர்களை கவர்ந்த அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்..