ஆல்யா மானசா, மணிமேகலை என டிவி பிரபலங்களின் சொகுசு கார்கள் விவரம்- ஒரு பார்வை
வெள்ளித்திரை பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்கள் மக்களிடம் அதிகம் பிரபலமாகிவிட்டனர். படங்களில் நடித்தால் அந்த 2.30 மணி நேரம் தான், ஆனால் சீரியல்கள் என்று வந்துவிட்டால் தொடர் முடியும் வரை வருவார்கள்.
சின்னத்திரை பிரபலங்கள் யூடியூப் பக்கம் ஆரம்பித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். எங்கேயும் சென்றால், வீட்டில் விசேஷம், புதிய வீடு, வீட்டில் இருக்கும் Fridge என எல்லாவற்றையும் வீடியோவாக காட்டி அதிக பிரபலமும் அடைகிறார்கள்.
அப்படி பெரும்பாலும் அதிகம் விஜய் டிவி பிரபலங்கள் புதிய கார் வாங்கியிருக்கிறார்கள், அவர்கள் தங்களது இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்கள்.
மணிமேகலை
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமானவர். இவர் பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 என்ற சொகுசு கார் இருப்பதாகவும், அதன்விலை ரூ. 55 லட்சத்திற்கும் அதிகம் என்கின்றனர்.
சரண்யா
நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் பிரபலமான இவர் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 வைத்துள்ளாராம், விலை ரூ. 78 லட்சமாம். அதோடு இவர் பிஎம்டபிள்யூ பைக்கும் வைத்துள்ளாராம், அது ரூ. 3 லட்சத்திற்கு இருக்குமாம்.
ஷிவானி நாராயணன்
இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம் அதிக பிரபலமான இவர் சமீபத்தில் பிஎம்டயிள்யூ 7 சிரிஸ் கார் வாங்கியிருக்கிறார், அதன்விலை ரூ. 1.2 கோடிக்கும் அதிகம்.
ஆல்யா மானசா
மெர்சிடஸ் பென்ஸ் சி கிளாஸ் சொகுசு கார் வைத்துள்ளனர், விலை ரூ. 57 லட்சத்திற்கும் அதிகமாம்.
ஈரம் பட புகழ் நடிகை சிந்து மேனனை நியாபகம் இருக்கா?- இரண்டு குழந்தைகளுக்கு பிறகு எப்படி உள்ளார் பாருங்க