இந்த புகைப்படத்தில் இருக்கும் இரு முன்னணி நடிகர்கள் யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் இரு முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர்களை சில ரசிகர்கள் கண்டுபிடித்தாலும், பலரும் இந்த நட்சத்திரங்கள் யார் என கேட்டு கேள்வி எழுப்பி வருகிறார்.
இவர்கள் தானா
அவர்கள் வேறு யாருமில்லை ஒரே குடும்பத்தில் இருந்து வந்த நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக் தான். ஆம், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சூர்யா நடிப்பில் அடுத்ததாக கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. அதே போல் கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படம் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாமன்னன் படத்திற்காக நடிகர் வடிவேலு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?