கமல் ஹாசனுக்கு கிடைத்த அங்கீகாரம்.. வெளிவந்த புகைப்படம்
தமிழ் சினிமாவில் மூத்த நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் உலகநாயகன் கமல் ஹாசனின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம்.
இப்படம் இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளில் பல கோடி வசூலை குவித்து வருகிறது. நடிகர் கமல் ஹாசன் தற்போது துபாய் சென்றுள்ளார் என்பதையும், அங்கு அவருக்கு கோல்டன் விசா வழங்கப்போவதும் சில நாட்களுக்கு முன் தெரியவந்தது.
இந்நிலையில், இன்று துபாய்யில் அமீரக அரசு நடிகர் கமல் ஹாசன் அடுத்த 10 வருடத்திற்கான கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
கமல் ஹாசனுக்கு முன்பு, விஜய் சேதுபதி, காஜல் அகர்வால், பார்த்திபன், திரிஷா, அமலா பால், மீனா, போன்ற தமிழ் நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்! Manithan
ஒன்பது நாட்களுக்குப் பிறகு... நேபாள நீர்மின் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர் News Lankasri