பொது மேடையில் முதன்முறையாக தனது மகன் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்- என்ன கூறினார் தெரியுமா?
உதயநிதி ஸ்டாலின்
விஜய்யின் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி அதன்பின் ஆதவன் படத்தில் நடிகராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின்.
தொடர்ந்து 4 படங்களை தயாரித்த பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கினார்.
மனிதன், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்கள் அவரின் நடிப்பிற்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. இப்போது அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருவதால் சினிமாவில் இனி நடிக்கப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.
மகன் குறித்து உதயநிதி
கிருத்திகா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்ட உதயநிதிக்கு இன்பா என்ற மகனும், தமன்யா என்ற மகளும் உள்ளனர்.
அண்மையில் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் தனது மகன் குறித்து உதயநிதி பேசும்போது, என்னுடைய மகனை அறிமுகம் செய்த போது அவர் ஒரு கால்பந்து வீரர் என்று சொன்னார்கள் ஆனால் அவர் டேபிள் டென்னிசும் ஆடுவார்.
என்னுடைய வீட்டில் ஒரு டென்னிஸ் கோர்ட் இருக்கிறது ஆனால் அதில் நான் அடிக்கடி விளையாட மாட்டேன் எப்போதெல்லாம் இன்பநதி துவண்டு போய் இருக்கிறாரோ அப்போது என்னுடன் விளையாட அவர் அழைப்பார்.
அதில் என்னை தோற்கடிக்க செய்து அவர் கொஞ்சம் உற்சாகமடைந்து கொள்வார் என பேசி இருக்கிறார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மகளை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக எந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்கள் பாருங்க