அந்த படத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தப் போகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

By Yathrika Jul 13, 2022 04:00 AM GMT
Report

நடிகர் உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் தன்னை நடிகராக அடையாளப்படுத்திக் கொண்டவர். நடிக்க வருவதற்கு முன் ரெட் ஜெயின்ட் மூவிஸ் மூலம் நிறைய படங்களை விநியோகம் செய்வது, தயாரிப்பது என சினிமாவில் இருந்து கொண்டு தான் இருந்தார்.

நடிக்க வந்ததற்கு பின் நடிப்பில், நடனத்தில் உயர்ந்துகொண்டே வந்தார்.

படங்களையும் காதல் காட்சி, நடனம் என ஆடிவிட்டு செல்லாமல் தரமான கதையுள்ள படங்களாக தேர்வு செய்து நடித்தார்.

கடைசியாக அவரது நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது, இப்பட 50வது நாள் வெற்றிக் கொண்டாட்டமும் அண்மையில் நடந்தது.

அந்த படத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தப் போகிறாரா உதயநிதி ஸ்டாலின்? | Udhayanidhi Stalin Plan To Quit Acting

 உதயநிதி பேச்சு

இந்த 50வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி இப்படத்தை வெற்றிபெற வைத்த ரசிகர்களுக்கு நன்றி. நான் மாமன்னன் படத்திற்கு பிறகும் நடிப்பேன். தரமான கதைக்களம் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என கூறி நடிப்பை நிறுத்தப்போகிறார் என்ற வதற்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதோடு வருங்காலத்தில் அருண்ராஜா இயக்கத்தில் ஒரு படம் நடிப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கணவரை இழந்த நடிகை மீனாவிற்கு இன்று திருமண நாள்- கடந்த வருடம் இதே நாளில் அவர் போட்ட பதிவு 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US