கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி! இயக்குனர் பற்றி கசிந்த தகவல்

By Parthiban.A Aug 09, 2022 04:00 PM GMT
Report

கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி அடுத்து ஒரு படம் நடிக்கிறார் என முன்பே தகவல் வந்த நிலையில், அந்த படத்தின் இயக்குனர் யார் என்கிற விவரம் வெளிவந்திருக்கிறது.+

கமல் - உதயநிதி கூட்டணி

கமல்ஹாசனின் விக்ரம் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பிலிம்ஸ் ரிலீஸ் செய்தபோது 'உதயநிதி கமலை மிரட்டி வாங்கி இருப்பார்' என கிசுகிசுக்கப்பட்டது. அது பற்றி விளக்கம் சொன்ன உதயநிதி 'கமலை யாரும் மிரட்ட முடியாது' என கூறி இருந்தார்.

அதன் பின் விக்ரம் படமும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. மேலும் உதயநிதி நடிக்கும் படம் ஒன்றை கமல் தயாரிக்க போகிறார் எனவும் தகவல் வந்தது.

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி! இயக்குனர் பற்றி கசிந்த தகவல் | Udhayanithi In Kamal Production

இயக்குனர் இவர்தான்

அந்த படம் பற்றி எந்த தகவல்களும் வராமல் இருந்த நிலையில் தற்போது இயக்குனர் யார் என்கிற விவரம் வெளிவந்திருக்கிறது.

சசிகுமாரின் கிடாரி படம், குயின் வெப் சீரிஸ் ஆகியவற்றை இயக்கிய பிரஷாந்த் முருகேசன் தான் உதயநிதியின் அடுத்த படத்தை இயக்குகிறாராம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். 

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி! இயக்குனர் பற்றி கசிந்த தகவல் | Udhayanithi In Kamal Production

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US