உல்லாசம் திரைப்பட நடிகை மகேஷ்வரி என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
நடிகை மகேஷ்வரி
1997ம் ஆண்டு அஜித்-விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை மகேஷ்வரி.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகளான இவர் முதன் முதலாக 1994ம் ஆண்டு வெளிவந்த க்ரண்ட்டிவீர் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அதன்பின் கருத்தம்மா என்ற படத்தில் நடித்த மகேஷ்வரிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் நடித்த பாஞ்சாலங்குறிச்சி, நாம் இருவர் நமக்கு இருவர், உல்லாசம், நேசம், ரத்னா, என்னுயிர் நீதானே, சுயம்வரம் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்.
சொந்த தொழில்
பட வாய்ப்புகள் குறைய ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்ட மகேஷ்வரி பேஷன் டிசைனில் அதிக ஆர்வம் இருந்ததால் அந்த தொழிலில் தான் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
இவரது இந்த தொழிலுக்கு மிகவும் உருதுணையாக இருந்தது நடிகை ஸ்ரீதேவி தானாம், இதனை பல பேட்டிகளில் அவரே கூறியுள்ளார்.
இதோ வெளியானது நடிகை ஆல்யா மானசாவின் புதிய தொடர் புரொமோ- இதுதான் சீரியல் பெயரா?