இதோ வெளியானது நடிகை ஆல்யா மானசாவின் புதிய தொடர் புரொமோ- இதுதான் சீரியல் பெயரா?
நடிகை ஆல்யா மானசா
நடனம் தான் இவர் சினிமாவில் நுழைய முதல் துறையாக இருந்தது. மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் பின் விஜய் டிவி பக்கம் வந்தார்.
அதில் பிரவீன் பென்னட் இயக்க தயாரான ராஜா ராணி என்ற தொடரில் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.
அவரது முதல் தொடரே பெரிய ரீச் கொடுத்தது, வாழ்க்கையை தொடங்கவும் ஒரு காரணமாக இருந்தது. அதாவது அதில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்ற நடிகரையே காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்றுவிட்டார்.
இரண்டாவதாக கமிட்டான ராஜா ராணி தொடரில் பிரசவத்திற்காக பாதியிலேயே வெளியேறினார்.
புதிய தொடர்
கடந்த சில மாதங்களாகவே ஆல்யாவின் புதிய தொடர் குறித்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நடிகை ஆல்யா மானசா சன் டிவியில் புதிய தொடர் நடிக்க அதை சரிகமப நிறுவனம் தயாரிக்கிறார்கள்.
தொடருக்கு இனியா என்ற பெயர் வைத்துள்ளார்களாம், அதில் ஆல்யாவின் லுக் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,
நடிகர் பிரபுதேவாவின் மகன்களா இவர்கள்?- நன்றாக வளர்ந்துவிட்டார்களே, போட்டோ இதோ