செப்டம்பரில் வெளியாகும் நடிகர் உமாபதி ராமையா நடிக்கும் 'பித்தல மாத்தி'
உமாபதி இராமையா
நடிகர் உமாபதி இராமையா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'பித்தல மாத்தி' என பெயரிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பித்தல மாத்தி'. இதில் உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி, பால சரவணன், வினுதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், 'ஆடுகளம்' நரேன், 'காதல்' சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். என். வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை ஏ. எல். ரமேஷ் மேற்கொண்டிருக்கிறார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் பேசுகையில்
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சரவணா பேசுகையில், '' பித்தல மாத்தி என்றால் கேடித்தனம்.. தகிடு தத்தம்.. செய்பவர்களை குறிக்கும். ஒருவர் வாழ்க்கையில் நல்லது கெட்டதற்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்பதனை விவரிப்பது தான் இதன் திரைக்கதை.
கதையின் நாயகன் அவருடைய வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதனை தெரிந்து கொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகள் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்? என்பதுதான் இப்படத்தின் கதை. இந்தத் திரைப்படத்தை செப்டம்பர் 22 ஆம் தேதியன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது'' என்றார்.