பிக் பாஸ் நிகழ்ச்சியில் WWE வீரர் Undertaker.. இந்த சீசன் தீயா இருக்க போகுது
பிக் பாஸ்
பிக் பாஸ் 9 வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் தமிழில் துவங்கவுள்ளது. ஆனால், இதுவரை ப்ரோமோ வீடியோ வெளிவரவில்லை.
ஆனால், ஹிந்தியில் துவங்கவிருக்கும் பிக் பாஸ் 19 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், பிக் பாஸ் 19ல் கலந்துகொள்ளப்போகும் இரண்டு மாபெரும் நட்சத்திரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
undertaker & மைக் டைசன்
90ஸ் கிட்ஸின் மனதில் இடம்பிடித்த WWE வீரர் undertaker பிக் பாஸ் 19ல் வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் குத்துசண்டை வீரர் மைக் டைசன் பிக் பாசில் கலந்துகொள்ளப்போகிறார் என கூறப்படுகிறது.
Undertaker மற்றும் மைக் டைசன் ஆகிய இருவரும் சல்மான் கான் தொகுத்து வழங்கப்போகும் பிக் பாஸ் 19ல் பங்கேற்கப்போவதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்களுக்கு குஷி ஏற்படுத்தியுள்ளது.