அஜித்-விஜய் முதன்முறையாக எப்போது, எப்படி சந்தித்தார்கள் தெரியுமா?- இதுவரை யாருக்கும் தெரியாத தகவல்
அஜித்-விஜய்
இருவரும் தமிழ் சினிமாவின் இரண்டு கண்கள் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள். இவர்கள் பெயரை பயன்படுத்தாத நிகழ்ச்சியோ, படமோ, வேறு எந்த கலை நிகழ்ச்சியே இல்லை.
அப்படி பெரிய அளவில் கொண்டாடப்படும் இவர்கள் ஆரம்பத்தில் நிறைய சோதனைகளை சந்தித்துள்ளார்கள். அஜித் சினிமாவில் யாரும் தெரியாமல் வளர்ந்தார், விஜய் அப்பாவின் பிரபலம் இருந்தாலும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
அஜித் தனது 61வது படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்க விஜய்யோ தனது வாரிசு படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
முதல் சந்திப்பு
நல்ல நண்பர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் அஜித்-விஜய் இருவரின் முதல் சந்திப்பு எப்படி இருந்தது என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
அஜித்தின் அமராவதி படம் ரிலீஸ் ஆன நேரம், படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் மூலம் தெரிந்துகொள்ள திரையரங்கின் வாசலில் காத்துக் கொண்டிருந்திருக்கிறார் அஜித்.
விஜய் தனது நண்பர்களுடன் படம் பார்த்துவிடடு வெளியே வந்து அஜித்திடம் தன்னை விஜய் என அறிமுகப்படுத்தியுள்ளார். இப்படி தான் இந்த இரண்டு பெரிய நடிகர்களின் முதல் சந்திப்பு நடந்துள்ளது.
அதிரடி வசூல் வேட்டையில் தி லெஜண்ட் திரைப்படம்- 6 நாள் முடிவில் இத்தனை கோடியா?

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
