சிம்ரன் வேடத்தில் அஜித்துடன் நடிக்க முதலில் கமிட்டானது இந்த நாயகி தானா?- வருத்தப்பட்ட நடிகை
வாலி திரைப்படம்
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 1999ம் ஆண்டு அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலி. அஜித்தின் சினிமா பயண ஆரம்ப கட்டம், அப்போதே அவர் இரட்டை வேடத்தில் நடித்தது மிகவும் நெகட்டீவாக பேசப்பட்டது.
ஆனால் படம் வெளியாகி மாஸான வரவேற்பை பெற்றது.
இதில் சிம்ரன் வேடத்தில் நாயகியாக நடிக்க முதலில் கீர்த்தி ரெட்டியை தான் படக்குழு அணுகியுள்ளனர், அவர் முடியாது என கூற பின்பே சிம்ரன் கமிட்டாகியுள்ளார். இவரைத் தாண்டி மீனா மற்றும் ரோஜாவிடமும் இப்படத்தில் நாயகியாக நடிக்க கேட்கப்பட்டுள்ளது, அவர்கள் சில காரணங்களால் மறுத்துள்ளனர்.
வருத்தப்பட்ட மீனா
நடிகை மீனா தனது கணவர் வித்யாசாகர் இறப்பிற்கு பிறகு இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்புகிறார். இந்த நேரத்தில் தான் அவரது பேட்டி ஒன்று வைரலாகிறது. எனது சினிமா பயணத்தில் நிறைய ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை நான் இழந்துள்ளேன்.
வாலி படத்தில் நடிக்க அணுகியபோது வேறொரு படத்தில் கமிட்டானதால் நடிக்க முடியாமல் போனது. அதேபோல் ப்ரண்ட்ஸ் மலையாளத்தில் நான் நடித்தேன், ஆனால் தமிழில் தேவயானி வேடத்தில் நடிக்க என்னை அணுகியபோது தேதி தான் பிரச்சனையாக இருந்தது.
இப்படி நிறைய பட வாய்ப்புகளை இழந்திருப்பதாக அவர் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் ஜனனியா இது, படு வைரலாகும் அவரது லேட்டஸ்ட் க்ளிக்- என்ன லுக் பாருங்க

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
